Select Page

ஸ்ரீவித்யா தந்த்ர யோகா
(அனைத்து வகுப்புகளும்/பயிற்சிகளும் இலவசம்)

இல்லற வாழ்வை நடத்தும் ஒருவர் ஒரு முறையான தினச்சரியா பின்பற்றாமல் சாதனா செய்வது என்பது எளிமையன்று.  சாதகன் பிராணாயாமம் அனுபவிப்பதற்கு நாடி சுத்தி அவசியமாகும். மந்திரங்களின் ஆந்தரிக உச்சாடனம் உணர கும்பக பயிற்சியால் மட்டுமே இயலும். மந்திரங்களின் பலன்களை அனுபவிப்பதற்கு முறையான அணுகுமுறையால் மட்டுமே சாத்தியமாகும். அவ்வாறான பயிற்சி முறையின் விவரங்கள் கீழ்வருமாறு

துவக்கநிலை சாதனைகள்

தினாசார்ய (நித்ய கர்ம), தத்வ சுத்தி/ பஞ்ச அமர யோகா, நாடி, பிராண யோகா, ஷட் ஆதாரங்கள், ஷோடஶ ஆதாரங்கள், அஷ்ட கும்பகம், தச முத்திரைகள் மற்றும் பிரணவ பஞ்சாக்ஷரி சாதனைகள் என்பவைகளாகும்.

ஶ்ரீவித்யா துவக்க நிலை

குரு, கணபதி, இஷ்ட தேவதா சாதனா, ஷட் ஆதார சாதனா, பர பிரசாத வித்யா, பாலா ஆந்தரிக ஜெபம், பூஜை, தர்பணம் [திரிபுர பாலா வித்யா(த்ரி – அக்ஷரி), பாலா பரமேஸ்வரி வித்யா ( ஷட் – அக்ஷரி) மற்றும் யோகா பாலா வித்யா (நவ – அக்ஷரி)

ஶ்ரீவித்யா இடைநிலை

வ்யோம பஞ்சக வித்யா, பஞ்சதசி வித்யா, வாமகேஷ்வரி வித்யா மற்றும் சந்திர வித்யா உள்ளடக்கிய லலிதா சாதனா.  சந்திர வித்யாவில் மேரு பிரஸ்தார, கைலாச பிரஸ்தார, பூ பிரஸ்தார, நித்யா தேவதைகளுக்கான சந்திர கலா வித்யாவின் அங்க வித்யா என்பை உள்ளடங்கும்

ஶ்ரீவித்யா மேம்பட்ட நிலை

16 நித்யா தேவதைகளுக்கான இடா மற்றும் பிங்களையில் உள்ள 16 சக்ரங்களும்,  சுஷும்னாவில் ஷோடஶிக்கான 28 சக்ரங்களும் ஷோடஶி வித்யாவில் கற்பிக்கப்படுகிறது.   மேலும், இறுதியாக காம கலா வித்யா கற்பிக்கப்படும். 
பரா வித்யா: அங்க வித்யா(ஜாக்ரத் – ஜாக்ரத்), அதைத் தொடர்ந்து பஞ்ச கூட பஞ்சமி வித்யா: அங்க வித்யா (ஜாக்ரத் – ஸ்வப்னம்), அடுத்து பஞ்ச ஆகாச வித்யா: அங்க வித்யா (ஜாக்ரத் – சுஷுப்தி) என்பவையும் கற்பிக்கப்படும்

மேற்படி குறிப்பிடப்பட்டுள்ள ஶ்ரீ வித்யா துவக்கநிலை, இடைநிலை மற்றும் மேம்பட்ட நிலைகள் சாதகனுடைய ஆந்தரிக உடலில் ஶ்ரீ வித்யையை தெளிவாக உணர்வதற்கு எதுவாக பகுக்கப்பட்டவையே  தவிர ஒரு பாடத்திட்டம் போன்று எளிதில் பயில்வதற்கு அன்று. பலருக்கும், இடைநிலையில் மேரு பிரஸ்தார என்னும் ஆந்தரீக பூஜா முறையிலும், பர பிரசாத வித்யா மூலம் துவக்க நிலையிலும் தியானத்தில் சமாதி நிலையை அடைய வழி வகுக்கும்
error: Content is protected !!