Select Page

வாஸ்து

பயிலரங்கு, குழு அமர்வு, வார இறுதி நாட்களில் நடத்தப்படும் வகுப்புகள், மற்றும் ஆர்வமுள்ளவர்களுக்கான நேரடி வகுப்புகள் மூலம் பயிற்றுவிக்கப்படும் வாஸ்துவின் பாடங்கள் மற்றும் விவரங்கள் பின்வருமாறு.

வைதீக சம்பிரதாயத்தைச் சார்ந்த வீடு/அபார்ட்மெண்ட்/மனைகளுக்கான வாஸ்து சாஸ்திரம்

மனை தேர்ந்தெடுப்பது முதல் கட்டிடத்தில் அறைகளின் அமைப்பு மற்றும் அறைகளில் பொருட்களை எங்கு வைக்க வேண்டும் போன்ற பல விஷயங்களைக் குறித்த ஞானத்தைக் கற்பிக்கும் விரிவான படிப்பு ஆகும்.  அறைகளில் தவறான இடங்களில் பொருட்களை வைப்பதனால் உண்டாகும் தோஷங்களைக் குறித்தும் அவற்றை களைய செய்ய வேண்டிய பரிகார முறைகளைக் குறித்தும் கற்பிக்கப்படும்.

வணிக மற்றும் தொழில்துறை வளாகத்திற்கான வாஸ்து சாஸ்திரம்

வணிக ஸ்தாபனத்தைப் பொருத்தும் அங்கு செய்யும் பணியைப் பொறுத்தும் எந்தெந்த துறைகள் எங்கு அமைக்க வேண்டும், மற்றும் அவற்றின் அறைகள் எங்கு அமைத்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படும்.  இதில், வாஸ்து சம்பந்தமான அடிப்படை பாடங்கள் கற்பிக்கப்படுவதால், வீடு/மனை சம்பந்தப்பட்ட வாஸ்து சாஸ்திரம் படிக்காமலேயே இதனை ஒரு தனி படிப்பாக எடுத்து படிக்கலாம்

கேரள வாஸ்து வித்யை

கேரள வாஸ்து வித்யையில் முறைப்படி வீடு/மனைகளை அளக்கும் முறை, எந்த திசையை நோக்கி வீட்டின் தளவமைப்பு அமைக்க வேண்டும்  என்பதையும், சில பகுதிகளில் பின்பற்றப்படும் நடைமுறையைக் குறித்தும்  கற்பிப்பது ஒரு தனிச்சிறப்பாகும். கேரளத்தில் அங்கீகரிக்கப்பட்ட வைதீக சம்பிரதாயத்தைச் சார்ந்த அடிப்படை பாடங்களும் மற்றும் கேரள வாஸ்து சாஸ்திரத்திற்கு மட்டுமே உரிதான சிறப்பு பாடங்களும் கற்பிக்கப்படும்.

ஃபெங் ஷுயி

ஃபெங் ஷுயி முறை இந்தியாவில் பிரபலம் அடைந்து வருவதால், வாஸ்து சாஸ்தர பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக கற்பிக்கப்படுகிறது. நேர்மறை ஆற்றல் பெருக்க மற்றும் பரிகாரங்கள் செய்ய உபயோகிக்கப்படும் உபகரணங்களை விடுத்து, வீடுகளை எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டும் என்பதை குறித்த தத்துவார்த்த ஆய்வு ஃபெங் ஷுயியில் நடத்தப்பட்டுள்ளது.  இந்த பாடத்திட்டம் ஃபெங் ஷுயியைக் குறித்த விரிவான பாடத்திட்டம் ஆகும்.

குறிப்பிட்ட தலைப்பில் வாஸ்து சாஸ்திரம்

ஆலய வாஸ்து, மதங்களில் பின்பற்றப்படும் வாஸ்து, வாஸ்து பரிகாரங்கள், வாஸ்துவில் ஜோதிடம், யந்த்ரங்கள் பூஜைகள் சம்பந்தப்பட்ட வாஸ்து போன்ற பல்வேறு குறிபிட்ட வாஸ்து சாஸ்திர பாடத்திட்டங்கள் மூலம் புதிதாக வாஸ்து சாஸ்திரத்தை படிக்கும் மாணவர்களும் மற்றும் வாஸ்து சாஸ்திர பயிற்சியாளர்களும் தம்முடைய வாஸ்து சாஸ்திரம் குறித்த ஞானத்தைப் பெருக்கிகொள்ளலாம்.

error: Content is protected !!