மஹாநிர்வாண தந்த்ரம், குலார்ணவ தந்த்ரம் மற்றும் பல க்ரந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, தந்த்ரம் இக்கலியுகத்தில் மெய்உணர்வு சித்திக்க ஒரு பயனுள்ள மார்கமாகும். ஸ்ரீவித்யா தந்த்ர பீடம் யாவரும் பயன்பெறும் வகையில், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மோக்ஷ வித்யையை ஜாதி, மதம், பாலின வேற்றுமையின்றி ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் பயிலுவதற்கான வாய்ப்பினை நல்குகிறது.
உலகெங்குமுள்ள ஸ்ரீவித்யா சாதகர்கள் பயன்பெறும் வண்ணம் ஸ்ரீ வித்யையின் பக்தி, ஞானம், க்ரியா, சர்யா மார்கங்களின் விவரங்களும், பாடங்களும் ஸ்ரீவித்யா தந்த்ர பீடத்தின் யூட்யூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பக்கங்களில் வெளியாகிறது. ஸ்ரீவித்யா தந்த்ரத்தின் ஆதாரமான குண்டலினி தந்த்ரத்தின் க்ரியைகள், ஸ்ரீவித்யா பூஜா மற்றும் ஸ்ரீவித்யா யோகா வகுப்புகள் வாயிலாக பக்தி, சர்யா, ஞானம் சேர்ந்த பூஜா மற்றும் யோக க்ரியைகளாக பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும், சாதகர்கள் பூரண ஞானம் பெற வேண்டி, கற்பிக்கப்படும் ஒவ்வொரு க்ரியையின் முக்கியத்துவமும், உட்கருத்தும் மற்றும் அவற்றின் பல்வேறு அம்சங்களும், பல்வேறு கோணங்களில் விவரிக்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகிறது. ஆன்லைன் வகுப்பானாலும் நேர்முக வகுப்பானாலும், ஒவ்வொரு சிஷ்யருக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படுகிறது. சாதகர்கள் தாம் கற்றறிந்த சாதனா விதானங்களின் செயல்முறையின் தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே அடுத்த கட்ட சாதனா வகுப்புகளுக்கு தகுதியுடையவர்களாகிறார்கள்.
ஸ்ரீவித்யா தந்த்ர பீடத்தின் கல்விமுறை குருகுல ஸம்ப்ரதாயத்தை பின்பற்றி வகுக்கப்பட்டது. ஒவ்வொரு நிலையிலும் பயிற்றுவிக்கப்பட்ட பாடங்கள் அனைத்தையும், சிஷ்யர்கள் ஒவ்வொருவரும் யாருடைய உதவியுமின்றி செயல்முறை தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே அடுத்ததக்கட்ட பாடத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஆகையால், ஸ்ரீவித்யா தந்த்ர பீடம், ஸ்ரீவித்யா சாதனையில் முழு மனதோடு கூடிய அர்ப்பணிப்பு ஒன்றையே சிஷ்யர்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறது.