Select Page

ஜோதிஷம்

பயிலரங்கு, குழு அமர்வு, வார இறுதி நாட்களில் நடத்தப்படும் வகுப்புகள், மற்றும் ஆர்வமுள்ளவர்களுக்கான நேரடி வகுப்புகள் மூலம் பயிற்றுவிக்கப்படும் ஜோதிடத்தின் பாடங்கள் மற்றும் விவரங்கள் பின்வருமாறு.

கேரள பிரசன்ன ஜோதிடம்

பிரசன்ன ஜோதிட பாடங்களாக கேரள கவடி பிரசன்னம் கற்பிக்கப்படுகிறது.  அடிப்படை விஷயங்கள் முதல் களவு, திருமணம், ஆரோக்கியம், வேலை, பயணம், தொழில், செல்வம், உறவு, தேவதைகள், தோஷங்கள் என பல்வேறு விஷயங்களைக் குறித்த விரிவான பகுப்பாய்வு பிரசன்னம் மூலம் எவ்வாறு அறிவது என்னும் ஞானம் வழங்கப்படுகிறது.  வெறும் ஏட்டு கல்வியாய் அமையாமல், பல்வேறு யதார்த்த வாழ்வியல் சம்பவங்களின் விரிவான ஆய்வைத் தழுவிய கல்வியாகவே கற்பிக்கப்படுகிறது.

ஜோதிஷ விளக்கப்படம்

கணிப்பு விளக்கப்படம் தயாரித்தல் முதல் அவற்றின் விரிவான பகுப்பாய்வு மேற்கொள்ளல் வரையிலான பாடங்கள் கற்பிக்கப்படும்.  இதன் மூலம், ஒருவருடைய ஜாதகம் தயாரித்தல், ஜாதகத்தில் கிரஹ நிலை ஆராய்தல், தசா காலம் மற்றும் அவற்றின் தொடர்புடைய மற்ற காரணிகளின் பலன் அறிதல் போன்றவை விரிவாக கற்பிக்கப்படுகிறது.

தாந்த்ரீக சங்கு ஜோதிஷம்

 இது வாம தந்த்ரத்தில் திராவிட மாந்த்ரீகத்தின் துணை பாடமாகும். காளி தேவிக்கான சாதனையும் தீக்ஷையும் இப்பாடத்திட்டதில் ஒரு பகுதியாகும். சங்கு உபயோகித்து அனுகூலமற்ற கிரஹத்தின் விவரங்களும், அதன் பாதிப்புகளும், அதற்கான பரிகாரங்களை திராவிட தந்த்ர முறையில் ஆராய்ந்தறிவதற்கான பாடங்களும் கற்பிக்கப்படும். எனவே, சங்கு ஜோதிஷ பாடங்களோடு தந்த்ர தீக்ஷை, சாதனா மற்றும் பிரயோகங்களும் பயிற்றுவிக்கப்படும்

திருமண பொருத்தம் மற்றும் முஹூர்த்தம்

கேரள ஜோதிஷத்தில் நக்ஷத்ர பொருத்தம் பார்ப்பதில் மட்டும் முக்கியத்துவம் அளிக்காது, பாப சமயம், தச சந்தி பொருத்தம், நவாம்சம், ஆரோக்கியம், புத்ர பாக்கியம், மகிழ்ச்சி நிறைந்த இல்லற வாழ்கைக்கான பொருத்தமும் ஆராய்ந்து அறியப்படும். ஜாதகத்தை ஆராய்ந்து, நவக்ரஹங்களின் நிலையை பொறுத்து, தொழில் செய்வதற்கும், இல்லங்களில் சுபநிகழ்ச்சி நடத்துவதற்கும், குடும்பங்களில் சுபநிகழ்ச்சி நடத்துவதற்கு எவ்வாறு நல்ல நேரம் குறிப்பது என்றும் கற்பிக்கப்படும்.

குறிப்பிட்ட தலைப்புகள்

புதிதாக ஜோதிஷம் பயில துவங்கும் மாணவர்களுக்கும் மற்றும் ஜோதிஷம் கற்று பயிற்சியில் உள்ள ஜோதிடர்களுக்கும்  ஜோதிஷத்தில் மேலும் அறிவை பெருக்கிக்கொள்வதற்கு ஏதுவாக சிறப்பு பாடங்களாக ஆன்மீக ஜோதிஷம், ஆரோக்கிய ஜோதிஷம், நிமித்தம்/சகுனம் ஜோதிஷம், எண் கணிதம் மற்றும் ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரங்களைக் குறித்த விவரங்களும் பயிற்றுவிக்கப்படும்

error: Content is protected !!