Select Page

பூஜைகள்/ஹோமங்கள்/யந்த்ரங்கள்

பரிகார பூஜைகள் மற்றும் ஹோமங்கள் ஶ்ரீவித்யா தந்த்ர பீடத்தில் நடைபெறுகிறது. நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ வீட்டில் இருந்த படியே இதில் பங்கு பெறலாம். மேலும், தேவைக்கேற்ப உடலில் அணியக்கூடிய அல்லது வீடு/அலுவலகங்களில் வைக்கும் குறிப்பிட்ட யந்த்ரங்கள் தயார் செய்து வழங்கப்படும்.

பூஜைகள் (நேரடி/ஆன்லைன் வழி)

அவரவர் பிரச்சனைகளுக்கு ஏற்ப ஜோதிட தீர்வுகள் மூலம் பின்வரும் பூஜைகள் செய்து வைக்கப்படுகிறது. தோஷ சாந்தி பூஜைகளில் துர்கா பூஜை (சிக்கல்கள் நீங்க), காளி பூஜை (சத்ரு தோஷம் நீங்க), காமேஷ்வரி பூஜை (காரிய சித்தி பெற), உமா – மஹேஸ்வர பூஜை (விரும்பிய வாழ்க்கைத்துணை அமைய மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க), பிரத்யங்கிரா பூஜை (எதிர்மறை சக்திகளை அழிக்க), பித்ரு பூஜை (பித்ரு தோஷம் நீங்க), கணபதி பூஜை (தடைகள் நீங்க), திரிபுர பாலா பூஜை (தேர்வில் சிறப்பான வெற்றி பெற), நவக்ரஹ பூஜை (க்ரஹ தோஷங்கள் நீங்க), நாக பூஜை (நாக தோஷ சாந்திக்கு) போன்றவை உள்ளன.

ஹோமங்கள் (நேரடி/ஆன்லைன் வழி பங்குபெறலாம்)

பல்வேறு பரிகார ஹோமங்கள் ஶ்ரீவித்யா தந்த்ர பீடத்தில் நடைபெறுகிறது. ம்ருத்யுஞ்ஜய ஹோமம் (உடல் நலக்குறைவில் இருந்து நிவாரணம் பெற), கணபதி ஹோமம் (தடைகள் நீங்க), ஸ்வயம்வர பார்வதி ஹோமம் (திருமண தடைகள் நீங்க, விரும்பிய வாழ்க்கைத்துணை அமைய), துர்கா ஹோமம் (சச்சரவுகளில் வெற்றி பெற), உச்சிஷ்ட கணபதி ஹோமம் (நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற), லக்ஷ்மி ஹோமம் (செல்வ செழிப்பு பெற), சுதர்சன ஹோமம் – அகோர ஹோமம் – சூலினி ஹோமம் – பிரத்யங்கிரா ஹோமம் (பல்வேறு எதிர்மறை சக்திகளை அழிக்க), தில ஹோமம் (பித்ரு தோஷம் நீங்க), நவக்ரஹ பூஜை (க்ரஹ தோஷ சாந்திக்கு), மற்றும் பல்வேறு விதமான ஹோமங்களும் செய்து வைக்கப்படும்.

யந்த்ரங்கள் (உடலில் அணியவும் மற்றும் வீடு/அலுவலகங்களில் வைக்கவும்)

பொதுவாக அச்சடிக்கப்பட்ட யந்த்ரங்களை விட, தனிப்பட்ட அல்லது ஒரு நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப பிரத்யேகமான முறையில் தயார் செய்து சக்தி ஊட்டப்பட்ட யந்த்ரங்கள் மிகவும் வலிமை வாய்ந்தவை. அதில் வாராஹி யந்த்ரம் (எதிரிகளிடமிருந்து பாதுகாத்து கொள்ள), ம்ருத்யுஞ்ஜய யந்த்ரம் (ஆரோக்கிய வாழ்வு பெற), சுதர்சன யந்த்ரம் (அதிர்ஷ்டம் பெற மற்றும் துரதிர்ஷ்டம் நீங்க), திரிபுரசுந்தரி யந்த்ரம் (எடுத்த காரியத்தில் வெற்றி பெற), ஸ்வயம்வர யந்த்ரம் (வசீகரணம் பெற மற்றும் திருமண யோகம் கைக்கூட), பாலா யந்த்ரம் (குழந்தைககளை பாதுகாக்க), தாரா யந்த்ரம் (புகழ் மற்றும் செல்வாக்கு பெருக), மஹாலக்ஷ்மி யந்த்ரம் (தன வசியம் பெற), வித்யாராஜ்ஞீ யந்த்ரம் (கலைகளில் சிறந்து விளங்க) போன்ற யந்த்ரங்கள் அடங்கும். மேலும், தனிப்பட்ட பிரச்சினைகளுக்கான பிரத்யேக யந்த்ரங்களும் செய்து தரப்படும்.

பூஜை அல்லது ஹோமம் செய்ய விரும்புவோர், முழு பயன் அடையும் வகையில் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ கட்டாயம் பங்கு பெற வேண்டும். பணம் மட்டும் பெற்றுக்கொண்டு பூஜை செய்யப்படமாட்டாது.
error: Content is protected !!