சூலினி துர்கா, மஹா சுதர்சன மூர்த்தி, காளி, சாஸ்தா, உச்சிஷ்ட கணபதி, அகோர மூர்த்தி, பிரத்யங்கரா தேவி, வாராஹி, ஸ்வர்ணாகர்ஷன பைரவர், சரபேஸ்வரர், நரசிம்ஹ மூர்த்தி மற்றும் பல இஷ்ட தேவதைகளின் பூஜா/ஹோம விதானம் கற்பித்தல்
தச மஹாவித்யா, நவ துர்கா, அஷ்ட பைரவர், சப்த மாத்ருகள், நவகிரஹங்கள், பஞ்ச வாராஹி மற்றும் நித்யா தேவதைகளின் பூஜா/ஹோம விதானங்கள் கற்பித்தல்.
பிரத்யேக தந்த்ர கிரியைகள் – வாஸ்து பலி, பிரத்யேக யந்த்ரங்கள் தயாரித்தல் மற்றும் சக்தியூட்டல், நவக்ரஹ தேவதைகளுக்கான பூஜா விதானம், பித்ரு பலி, பித்ரு பூஜை, தில ஹவனம், குருதி பூஜை, பித்ரு தோஷ சாந்தி மற்றும் பாத உச்சாடனம் போன்ற தந்த்ர கிரியைகள் கற்பிக்கப்படுகிறது.
பாஹ்ய உபகரணங்களின்றி ஒரு குறிப்பிட்ட இஷ்ட தேவதைக்கான பீட பூஜை, மூர்த்தி பூஜை, மானஸ பூஜை, மற்றும் சமர்ப்பணத்துடன் முழு கிரியைகள் உள்ளடக்கிய ஆந்தரீக பூஜை கற்பித்தல்
ஶ்ரீ வித்யையில் தச மஹாவித்யா தேவதைகளின் ஆந்தரீக தந்த்ர சாதனா; ஶ்ரீவித்யாராஜ்ஞீ, மாதங்கி, அஷ்வாரூடா, சம்பத்கரீ, வாராஹி மற்றும் பிரத்யங்கிரா தேவி போன்ற ஶ்ரீவித்யா லலிதையின் குறிபிட்ட பரிவார தேவதைகளுக்கான யோக சாதனா; மஹா யாக, நாபி வித்யா மற்றும் நவாங்க சாதனா போன்ற தந்த்ர யோக பத்ததிகள் கற்பிக்கப்படும். ஆர்வமுள்ள சாதகர்களின் மனபக்குவமும் பின்பலமும் கற்பிப்பதற்கு முன் பரிசோதிக்கப்படும்.
ஶ்ரீவித்யையை வேறு சம்பிரதாயத்தில் அனுஷ்டிக்கும் சாதகர்களுக்கு பூஜா, ஹோமம், யோக சாதனா கிரியைகள் கற்பிக்கப்படும். நித்ய ஜெபம் செய்யும் சாதகர்கு பாலா மந்த்ரம் கற்கும் ஆர்வம் கொண்டால், தந்த்ர யோகா சாதகர்க்கு பர பிரசாத வித்யா கற்கும் ஆர்வம் கொண்டால், விருப்பத்தின் பேரில் கற்பிக்கப்படும்