நமது குருநாதர், அவதூதர் ஶ்ரீ வேணுகோபால் அவர்களின் வழிகாட்டுதலில் சமய மார்க்கத்தில் தீக்ஷை பெற்றுள்ளார். ஶ்ரீ வேணுகோபால் அவர்கள், ஶ்ரீ பைரவாநந்தரின் சிஷ்யரான ஶ்ரீ பாலகிருஷ்ணநாத் அவர்களின் சிஷ்யராவார். இந்த குரு பரம்பரை, சமய மார்க்கத்தின் ஶ்ரீவித்யா மந்த்ர சாதனையை பின்பற்றுகிறது. மேலும், ஹம்ஸ வித்யையை அடிநாதமாக கொண்டுள்ள பரா சாதனை இம்மார்க்கத்தின் முதன்மை போதனையாகும்.
மேற்கண்ட தீக்ஷை மற்றும் குரு உபதேசங்கள் அனைத்தும் குரு ஶ்ரீ ஜீதேஷ் சத்யன் அவர்கள் நேரடியாக குரு முகமாக பயின்றவை ஆகும். மேலும் அவர் ஆன்லைன் வாயிலாக பல்வேறு கௌள, மிஸ்ர குரு பரம்பரையைச் சேர்ந்த ஆச்சார்யர்களைத் தொடர்பு கொண்டு பயிற்சியும் பெற்றுள்ளார். அதில் மேன்ப்லந்தர் (Manblunder) ஐ சேர்ந்த ஶ்ரீ ரவி ஜி, மேதா யோகாவை (Medha Yoga) சேர்ந்த ஶ்ரீ கிருஷ்ணா ஜி போன்ற குருமகான்கள் மூலம் ஶ்ரீ சக்ர பூஜை, மற்றும் பல்வேறு பூஜா ஜப விதானங்களை பயின்றுள்ளார். மந்த்ர ஜபங்களுக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கும் ஶ்ரீ ரவி ஜி நம் குரு அவர்களுக்கு ஶ்ரீசக்ர பூஜை முறைகளை கற்பித்து, மற்றும் கேரளத்தில் உள்ள பல்வேறு தந்த்ர முறைகளை நேரடியாக பயில வழிகாட்டி உள்ளார்.