Select Page

குருவைப்பற்றி
ஸ்ரீ ஜிதேஷ் சத்யன்
(ஸ்ரீ யுகானந்த நாதர்)

“ஸ்ரீ யுகானந்த நாதர்” என்று தீக்ஷா நாமம் பெற்ற “ஸ்ரீ ஜிதேஷ் சத்யன்” அவர்கள் ஸ்ரீவித்யா தந்த்ர பீடத்தின் குரு ஆவார். அவர் கேரள தந்த்ரம் மற்றும் ஶ்ரீவித்யா தந்த்ர முறைகளைப் பல குருமார்கள் மூலம் பல்வேறு ஸம்பிரதாயங்களில் முறையாகப் பயின்றுள்ளார். மேலும் கேரள தக்ஷிணாசாரம், திராவிட கௌள – வாமம், மிஸ்ராசாரம், வேதம் மற்றும் ஸமயாசாரம் போன்ற பல்வேறு தந்த்ர ஸம்பிரதாயங்களில் பெரும் திறன் பெற்றுள்ள நமது குருவின் பிரதான குரு, மந்த்ர வித்யா பீடத்தின் குருநாதர் “பிரம்மஶ்ரீ T.D.P. நம்பூதிரி” ஆவார். அவரிடமிருந்து தந்த்ர பூஜைகள்/ஹோமங்கள், ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரங்களை முறையாகப் பயின்று தாம் கற்றவற்றை உலகெங்குமுள்ள பல மாணவர்களுக்கு பல ஆண்டுகளாகப் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார். கேரளத்தின் பல்வேறு ஆலய விழாக்களில் நடைபெறும் பிரதிஷ்டை (விக்ரகங்களை நிறுவும் நிகழ்வு), சர்ப்ப பூஜை (நாக தேவதைகளுக்கு சிறப்பு வழிபாடு), பித்ரு ஶ்ரார்தம் (இறந்த முன்னோர்களுக்காக திதி செலுத்தும் நிகழ்வு), உற்சவ பூஜைகள் போன்ற பல்வேறு ஆலயம் சார்ந்த நிகழ்வுகளை குரு அவர்கள் முன்னின்று நடத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது வீடுகளிலும், ஆலயங்களிலும் பல்வேறு மஹா பூஜை மற்றும் மஹா ஹோமங்களும் நடத்தியுள்ளார்.

ஜோதிடம் மற்றும் பிரசன்ன ஜோதிட முறைகளை மந்திர வித்யா பீடத்திலும் மற்றும் சில பாரம்பரிய ஆச்சார்யர்களிடமிருந்தும் கற்றறிந்தார். வாஸ்து வித்யையை மந்த்ர வித்யா பீடத்திலும், வாஸ்து வித்யா பீடத்திலும் பயின்றார். நமது குருநாதர், AIFAS- கூட்டமைப்பின் “ஜோதிஷ ரிஷி, வாஸ்து சாஸ்திராச்சார்யா மற்றும் அங்க் ஜோதிஷாசார்யா” போன்ற பட்டங்களை பெற்றுள்ளார்.

நமது குருநாதர் பணிக்கர் களரி மையத்தில் யோகா மற்றும் களரியில் பயிற்சி பெற்றுள்ளார். மேலும் உசுயி ஷிகி ரயோஹோ – ஹீலிங் டுடே, USA ன் சான்றிதழ் பெற்ற ரெய்கி பயிற்சியாளர் மற்றும் வேர்ல்ட் ரெய்கி அமைச்சகத்தின் ஹீலிங் அமைச்சர் ஆவார். அமெரிக்கன் ஹிப்னாஸிஸ் அசோசியேஷன் வழங்கிய “கடந்தகால வாழ்க்கை புதுப்பித்தலின் சிகிச்சையாளர்” (Past Life Regression Therapist) என்ற பட்டமும், மேம்பட்ட பிரானிக் சிகிச்சைமுறையின் (Advanced Pranic Healing) சான்றிதழும் பெற்றுள்ளார்.

ஶ்ரீ வித்யையில் க்ரம தீக்ஷை பெற்றுள்ள நமது குருநாதர், ஶ்ரீவித்யையின் தேவதைகளுக்கான சாதனையில் புரஸ்சரண முறையை அனுஷ்டித்து பூர்ண தீக்ஷையும் பெற்றுள்ளார். பல்வேறு தாந்த்ரீக ஆச்சார்யர்களிடம் பயிலும் காலத்தில், சித்த யோகம், திராவிட ஜோதிஷம், ஹம்ஸ வித்யை போன்றவற்றை பயிலும் வாய்ப்பைப் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். மேலும், வழக்கமான பாடமாக கற்பிக்கப்படாத வித்யைகளையும், தகுதியுடைய சிஷ்யர்களுக்கு மட்டுமே போதிக்கப்படும் பல்வேறு தனிச்சிறப்பு வாய்ந்த வித்யைகளையும் பயின்றுள்ளார்.

error: Content is protected !!