Select Page

ஸ்ரீவித்யை எதற்கு

இதி ப்ருஷ்டோ பகவதா ப்ரொவாச முனிஸத்தம: |
யதி துஷ்டொ ‘ஸி பகவன்னிமெ பாமரஜந்தவ: ||

ஸ்ரீவித்யை என்றால் என்ன? அதன் குறிக்கோள் என்ன? அது எவ்வாறு மற்ற தந்த்ர ஸம்ப்ரதாயங்களிலிருந்து வேறுபடுகிறது? போன்ற கேள்விகளுக்கு பிரம்மாண்ட புராணத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  தன்னுடைய பொருள் சார்ந்த தேவைகளை நிறைவேற்ற இல்லற வாழ்வில் பாடுபடும் ஒருவர், ஆன்மீகத்தில் முன்னேறயியலாது தவிக்கும் நிலையை உணர்ந்த அகஸ்திய மஹரிஷி, ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்வாமியிடம், “இல்லற வாழ்வில் பயணிக்கும் ஒருவர் பொருளாதார செழுமையும் ஆன்மீக வளமையும் ஒருசேரப் பெறும் மார்க்கத்தை” வழிகாட்டியருள வேண்டினார்.

தஸ்மாதஶேஷலோகநாம் த்புராராதநம் விநா |
ந ஸ்தோ போகாபவர்கௌம் து யௌகபத்யேந குத்ரசித் ||

அதற்கு ஸ்ரீ ஹயக்ரீவர், த்ரிபுர சாதனா அல்லது ஸ்ரீவித்யையை அனுஷ்டிக்காத ஒருவரால் புக்தியும் முக்தியும் ஒரே நேரத்தில் பெற இயலாது என தெளிவுபடுத்தினார்.  எனவே, புராணங்கள் பறைசாற்றுவது போல இல்லறத்தில் பயணிக்கும் ஒருவர் புக்தியும் முக்தியும் அடைய சிறந்த வழிகாட்டி ஸ்ரீவித்யையாகும்.

இறைவன் பால் பக்த மீரா கொண்டிருந்தது போன்ற ஆழமான பக்தியோ, ஞான, க்ரியா அல்லது கர்ம யோகத்தின் மூலம் மெய்உணர்வு அடைய தேவைப்படும் முழுமையான அர்ப்பணிப்போ, இல்லறத்தில ஈடுபாடு கொண்டவரிடம் காண இயலாது. ஏனெனில், இல்லற வாழ்க்கையின் சுகங்களைத் துறந்து, தீவிர பக்தியும், ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பும், சேவை மனப்பான்மையும், மெய் ஞானமும் கொண்டு முக்தியை அடையும் மார்க்கத்தை பின்பற்றும் ஒருவருக்கே பற்றற்ற நிலை என்பது சாத்தியமாகும்.   இல்லறத்தில் உள்ள ஒருவருக்கு பக்தி, க்ரியா, கர்ம மற்றும் ஞான யோக சாதனா மூலம், புக்தியின் வாயிலாக முக்தியை அடையும் ஒரு நடுநிலை மார்க்கமாக குண்டலினி தந்த்ரத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்ரீவித்யை விளங்குவது ஒரு வரப் பிரசாதமாகும்.

எனவே, ஸ்ரீவித்யையின் க்ரந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது போல மாதா த்ரிபுர ஸுந்தரியுடன் இரண்டறக் கலந்து மெய்உணர்தலுக்கான நிலையை அடைய, ஸ்ரீவித்யையை போதிக்கும் குருநாதர் தன் சிஷ்யர்களுக்கு மஹாத்மிய காண்டம் வாயிலாக பக்தியையும், சர்யா காண்டம் வாயிலாக கர்மாவைப் பற்றியும், க்ரியா காண்டம் வாயிலாக சாதனா க்ரியைகளையும், ஞான காண்டம் வாயிலாக ஞானத்தையும் போதிக்கிறார்.  ஸ்ரீவித்யா சாதகம் என்பது பக்தியை மட்டுமே செய்தோ அல்லது தியானம் ஒன்றை மட்டுமே செய்தோ சித்திக்கும் மார்கமன்று. இது ஸ்ரீவித்யா தந்த்ர பத்ததியில் குறிப்பிடப்பட்டுள்ளது போல பல்வேறு தேவதைகளின் உபாசனா க்ரமத்தில் வரும் ஒவ்வொரு நிலையிலும் உண்டாகும் முன்னேற்றத்தைப் பொருத்து, படிப்படியான முன்னேற்றத்துடன் கூடிய சாதகமாகும்.

error: Content is protected !!