ஜாதகத்தை ஆராய்ந்து திருமண பொருத்தம் பார்க்கப்படும். நக்ஷத்திர பொருத்தம், பாப சாம்யம், தசசந்தி தோஷம், நவாம்சம் மற்றும் ஜாதகத்தின் ராசி கட்டங்களை ஆராய்ந்து புத்ர பாக்யம் மற்றும் நீண்டகால மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான பொருத்தம் பார்த்து கூறப்படும்.
எல்லாவித சுப காரியங்களுக்கும் சிறந்த பலன்கள் அளிக்க வல்ல நல்ல நேரங்கள் குறித்து தரப்படும்.
ஜாதகத்தை முறையாக ஆராய்ந்து ஜாதகரின் வாழ்க்கையில் ஏற்படும் பணம், வேலை, தொழில், கல்வி மற்றும் குடும்பம் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.
பிறப்பு முதல் நடைபெற்ற சம்பவங்கள் உள்பட, ஜாதகத்தின் மூலம் தெளிவாக குறிப்பிட இயலாத பல்வேறு பிரச்சனைகளுக்கு கவடி பிரசன்னம்/ஹோரை ஜோதிடம் மூலம் பரிகாரம் வழங்கப்படும்.
சில நேரங்களில் ஜோதிட கணிப்புகளின் போது ஆரூடம் காரணமாக தடை ஏற்படும். இது போன்ற சமயங்களில், திராவிட தந்த்ரத்தை அடிப்படையாகக் கொண்ட காளியின் தாந்த்ரீக ஜோதிடம் மூலம் தீர்வு காணப்படும்.
ஜாதகம் கணித்து, எழுதி தரப்படும். ஜாதகத்தை விரிவாக ஆராய்வதற்கு மிகுந்த நேரம் செலவிட வேண்டியுள்ளதால், இந்த சேவைக்கு முன்பதிவு செய்து குருஜி அவர்களை தொடர்பு கொள்ளலாம்.