Select Page

ஸ்ரீவித்யா தந்த்ரம்

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மோக்ஷ வித்யையை கற்க

ஸ்ரீவித்யா தந்த்ரம்

வார இறுதி நாட்களில் இலவச வகுப்புகள்

ஸ்ரீவித்யா தந்த்ரம்

ஸ்ரீவித்யையில் நாட்டமுள்ளவர்களுக்கு முறையான பயிற்சி

இலவச வார இறுதி இணையவழி வகுப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய சேர்க்கை நடைபெறுகிறது:

ஸ்ரீவித்யா தந்திர பூஜை மற்றும் தந்திர யோகா
நாக தந்திர பூஜை மற்றும் தந்திர யோகா
சிறுவர்களுக்கான ஆன்மீகத்துடன் ஒருங்கிணைந்த பாரம்பரிய அறிவை வளர்க்கும் அடிப்படை பயிற்சி வகுப்புகள்

சித்த குண்டலினி சக்தி யோகா

Srividya Tantra Peedom ®

இந்தியாவில் கேரளாவை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஸ்ரீவித்யா தந்த்ர பீடம், அதி உன்னத ஞானமாகக் கருதப்படும் ஸ்ரீவித்யா தந்த்ரத்தை, முழு மனதோடு பயில ஆர்வமுள்ள அனைவருக்கும் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக பயிற்றுவிக்கும் உயரிய சிந்தனையால் நிறுவப்பட்டது.

குருவைப் பற்றி

“ஸ்ரீ யுகானந்த நாதர்” என்று தீக்ஷா நாமம் பெற்ற “ஸ்ரீ ஜிதேஷ் சத்யன்” அவர்கள் ஸ்ரீவித்யா தந்த்ர பீடத்தின் குரு ஆவார். குருநாதர் அவர்கள் கேரள தந்த்ரம் மற்றும் ஸ்ரீவித்யா தந்த்ர முறைகளின் பயிற்சியாளர்; உலகெங்கும் ஸ்ரீவித்யையில் ஆர்வமுள்ள ஆன்மீக அன்பர்களுக்கு இந்த அரிய ஞானத்தைப் போதித்து வருகிறார்.

ஸ்ரீவித்யா வகுப்புகள்

ஸ்ரீவித்யையில் ஆர்வமுள்ளவர்களுக்கு, ஸ்ரீவித்யையின் தந்த்ர சாதனா, தந்த்ர ஹோமம் மற்றும் தந்த்ர பூஜா விதானங்கள் அனைத்தும் இலவச ஆன்லைன் வகுப்புகள் மற்றும் நேரடி வகுப்புகள் மூலமாக பயிற்றுவிக்கப்படுகிறது. இவ்வகுப்புகளில் சேர விரும்புவோர், மேலும் விவரங்களுக்கு “தொடர்புகொள்ள” என்னும் பகுதியைப் பார்க்கவும்.

வகுப்புகள் - பயிலரங்கம்

ஸ்ரீவித்யா தந்த்ர பீடத்தில் கேரள தந்த்ரம், ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்திற்கான வகுப்புகள் நடைபெறுகிறது. எங்களுடைய முகநூல் பக்கத்தில் வகுப்புகள் சம்பந்தப்பட்ட விவரங்களும், நிகழ்ச்சிகளில் பங்கேற்க பதிவு செய்வதற்கான அறிவிப்புகளும் வெளியாகும். மேலும் விவரங்களுக்கு, “பாடத்திட்டம்” பகுதியைப் பார்க்கவும்.

ஆலோசனை சேவைகள்

ஸ்ரீவித்யா தந்த்ர பீடத்தில் தந்த்ரம், ஜோதிடம் மற்றும் வாஸ்து சார்ந்த ஆலோசனை சேவைகள் வழங்கப்படுகிறது. மேலும், ஆர்வமுள்ள அனைவருக்கும் ஸ்ரீவித்யா க்ரம தீக்ஷை, உபநயனம் மற்றும் தந்த்ர தீக்ஷை வழங்கப்படுகிறது.

அனுபவ சான்றுகள்

சிஷ்யர்களின் அனுபவங்கள்

எங்களுடன் யூட்யூப்-இல் இணையவும்

error: Content is protected !!