Select Page

ஸ்ரீவித்யா தந்த்ர பூஜை
(அனைத்து வகுப்புகளும்/பயிற்சிகளும் இலவசம்)

ஸ்ரீவித்யா தந்த்ர பீடத்தில், சாதகர்கள் முறையாக பயின்று அன்றாடம் அனுஷ்டிக்கும் சாதனா க்ரியைகளில் நல்ல முன்னேற்றம் காண்பதற்கு ஏதுவான பாடத்திட்ட அணுகுமுறை பின்பற்றப்படுகிறது.  கற்பிக்கும் முறையின் விவரங்கள் பின்வருமாறு.

லகு முறையிலான பூஜையும் ஹோமமும்

முதலில், கணபதி ஹோமம், சிவ பூஜை, துர்க்கை பூஜை மற்றும் காளி பூஜை போன்றவற்றின் விதானங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது.  இதன் மூலம் சாதகர்கள் இல்லங்களிலும், ஆலயங்களிலும் பூஜை மற்றும் ஹோமம் செய்வதற்கான அடிப்படை பயிற்சியைப் பெறுகின்றனர்.

சாதனா மற்றும் ஸ்ரீவித்யா தேவதைகளுக்கான லகு பூஜை

அடுத்தபடியாக பாலா, ஶ்ரீவித்யாராஜ்ஞீ, மாதங்கி, வாராஹி, அஷ்வாரூடா, ஸம்பத்கரீ, பிரத்யங்கிரா, லலிதா, ஷோடஶி சாதனா மற்றும் பூஜா விதானங்கள் கற்பிக்கப்படுகிறது.   இதன் மூலம் படிப்படியான முன்னேற்றமும், ஒவ்வொரு ஸ்ரீவித்யா தேவதைகளையும் உணர்வதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது

விரிவான ஆவரண பூஜை (ஸபரிவார பூஜை)

அதன் பிறகு ஸ்ரீவித்யா தேவதைகளுக்கான விரிவான ஆவரண பூஜையும், பாலாவிற்கான நவயோனி பத்ம பூஜையும், லலிதாவிற்கான நவாவரண பூஜையும் மற்றும் ஷோடஶியின் விரிவான ஆவரண பூஜா விதானங்களும் பயிற்றுவிக்கப்படுகிறது.

மஹா ஹோமம்

ஸ்ரீவித்யா சாதகர்களின் ஸ்ரீவித்யா சாதனா பயிற்சியின் போது வெளிப்படுத்தும் முன்னேற்றத்தையும் மற்றும் கற்கும் ஆர்வத்தையும் பொருத்து பூரண மஹா கணபதி ஹோமம், அகோர சிவ ஹோமம், ஸ்ரீவித்யா லலிதா ஹோமம், மஹா ப்ரத்யங்கிரா ஹோமம் மற்றும் பல ம‌ஹா ஹோமங்களும் கற்பிக்கப்படுகிறது

ஆந்தரிக பூஜையும் ஹோமமும்

பூஜா மற்றும் ஹோம விதானங்களின் செயல்முறையில் பக்குவமடைந்த சாதகர்களுக்கு ஆந்தரிக தேவதா உபாசனா கற்பிக்கப்படுகிறது.  இதன் மூலம் சாதகர்களுக்கு, பூஜை மற்றும் ஹோமங்கள் செய்வதனால் கிடைக்கும் பலனோடு தன்னுள் இறைவனை உணர்வதற்கான பயிற்சியும் உறுதிப்படுத்தப்படுகிறது. விரிவான ஆந்தரிக பூஜை பயிற்சியுடன் தன்னுள் அமைந்துள்ள சக்கரங்களுக்கு ஸ்ரீசக்ர ஆவரண பூஜையும் கற்பிக்கப்படுகிறது

மேற்படி குறிப்பிடப்பட்டுள்ள பாடத்திட்டங்கள் பாஹ்ய மற்றும் ஆந்தரிக பூஜா/ஹோமங்களோடு நில்லாது, மந்த்ர சாதனா, பிரயோகம், புரஸ்சரணம் மற்றும் ஶ்ரீவித்யையின் பல்வேறு நிலைகளுக்கான தீக்ஷை வழங்கும் முறையைக் குறித்த விவரங்களும், தீக்ஷை அளிப்பதற்கு பல வகையான கலசங்கள் தயார் செய்வதன் முறையைக் குறித்த விவரங்களும் கற்பிக்கப்படுகிறது.
error: Content is protected !!