கேரளாக்யமதம் சைகம் காஶ்மீரம் து த்விதீயகம் |
கௌடஸம்ஞம் த்ருதீயம் ஸ்யான்மதம் து பாவனாவிதௌ ||
ஆதௌ து கேரளம் தேவி ஶுத்தம் ஸர்வேஷு ஸம்மதம் |
ஶக்தி ஸங்கம தந்த்ரம்
(த்ருதீயோ பாகம், ஸுந்தரீ கண்டம், த்ருதீய படலம்)
கேரள பிராமணர்களால் அனுஷ்டிக்கப்படும் ஸ்ரீவித்யையின் தக்ஷிணாசார ஸம்ப்ரதாயமே ஸ்ரீவித்யா தந்த்ர பீடத்தில் பின்பற்றப்படுகிறது. ஸ்ரீவித்யையின் வாமாசார மற்றும் மிஸ்ர ஸம்ப்ரதாயங்களும் கேரளாவில் பிரசித்தி பெற்றவையாகும். திராவிட கௌள ஸம்ப்ரதாயமும், கேரள ஸம்ப்ரதாயத்தைத் தழுவிய காஷ்மீர/கௌட ஸம்ப்ரதாயமும், வைதீக ஸம்ப்ரதாயமும் மற்றும் அடிப்படை ஸம்ப்ரதாயங்களில் சிறு மாற்றங்களையுடைய ஸம்ப்ரதாயமும், ஸ்ரீவித்யையின் மேலும் சில ஸம்ப்ரதாயங்களாக கேரளாவில் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்தியாவில் அனுஷ்டிக்கப்படும் தந்த்ர ஸம்ப்ரதாயங்களில் கேரள தந்த்ரம் தனக்கென்று ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. ஆனால், மற்ற ஸம்ப்ரதாயங்களைக்காட்டிலும் மிக ரஹஸ்யமாகவும் எழுத்துவடிவம் பெற்ற வெகு சில க்ரந்தங்களாகவே விளங்குகிறது. இம்மூன்று முக்கிய ஸம்ப்ரதாயங்களின் வேறுபாடுகளைக் குறித்த விவரங்கள் ஶக்தி ஸங்கம தந்த்ரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. – ஸுந்தரீ கண்டம்