முதலில், கணபதி ஹோமம், சிவ பூஜை, துர்க்கை பூஜை மற்றும் காளி பூஜை போன்றவற்றின் விதானங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது. இதன் மூலம் சாதகர்கள் இல்லங்களிலும், ஆலயங்களிலும் பூஜை மற்றும் ஹோமம் செய்வதற்கான அடிப்படை பயிற்சியைப் பெறுகின்றனர்.
அடுத்தபடியாக பாலா, ஶ்ரீவித்யாராஜ்ஞீ, மாதங்கி, வாராஹி, அஷ்வாரூடா, ஸம்பத்கரீ, பிரத்யங்கிரா, லலிதா, ஷோடஶி சாதனா மற்றும் பூஜா விதானங்கள் கற்பிக்கப்படுகிறது. இதன் மூலம் படிப்படியான முன்னேற்றமும், ஒவ்வொரு ஸ்ரீவித்யா தேவதைகளையும் உணர்வதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது
அதன் பிறகு ஸ்ரீவித்யா தேவதைகளுக்கான விரிவான ஆவரண பூஜையும், பாலாவிற்கான நவயோனி பத்ம பூஜையும், லலிதாவிற்கான நவாவரண பூஜையும் மற்றும் ஷோடஶியின் விரிவான ஆவரண பூஜா விதானங்களும் பயிற்றுவிக்கப்படுகிறது.
ஸ்ரீவித்யா சாதகர்களின் ஸ்ரீவித்யா சாதனா பயிற்சியின் போது வெளிப்படுத்தும் முன்னேற்றத்தையும் மற்றும் கற்கும் ஆர்வத்தையும் பொருத்து பூரண மஹா கணபதி ஹோமம், அகோர சிவ ஹோமம், ஸ்ரீவித்யா லலிதா ஹோமம், மஹா ப்ரத்யங்கிரா ஹோமம் மற்றும் பல மஹா ஹோமங்களும் கற்பிக்கப்படுகிறது
பூஜா மற்றும் ஹோம விதானங்களின் செயல்முறையில் பக்குவமடைந்த சாதகர்களுக்கு ஆந்தரிக தேவதா உபாசனா கற்பிக்கப்படுகிறது. இதன் மூலம் சாதகர்களுக்கு, பூஜை மற்றும் ஹோமங்கள் செய்வதனால் கிடைக்கும் பலனோடு தன்னுள் இறைவனை உணர்வதற்கான பயிற்சியும் உறுதிப்படுத்தப்படுகிறது. விரிவான ஆந்தரிக பூஜை பயிற்சியுடன் தன்னுள் அமைந்துள்ள சக்கரங்களுக்கு ஸ்ரீசக்ர ஆவரண பூஜையும் கற்பிக்கப்படுகிறது