தீக்ஷை/மந்த்ர உபதேசம் பெற விரும்பும் சாதகர், குறிப்பிட்ட தேவதையின் சாதனா மூலம் பொருளாதாரம் அல்லது ஆன்மீக வாழ்கையில்
மேன்மை அடைய விருப்பம் கொண்டுள்ளாரா
என்பதை தெளிவாக ஆராய்ந்த பின்னரே, அத்தெய்வத்தின் மந்த்ரம் மற்றும் உபதேசம் வழங்கப்படும். குரு பரம்பரையில் பின்பற்றப்படும் முறையில் உபதேசமும் தீக்ஷையும் வழங்கப்படுகிறது. முறையான தேவதா ஆவாஹனத்தைத் தொடர்ந்து கலசாபிஷேகமும் ஹோம க்ரியைகளையும் செய்த பின்பு, தேவதா சாதனா முறை உபதேசிக்கப்படும்.
உபநயனம் – ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் புனிதமான நிகழ்வு ஆகும். இது சாதி மத பேதமின்றி, இந்த சம்பிரதாயத்தை பின்பற்ற விரும்பும் எவருக்கும் செய்து வைக்கப்படுகிறது. பாரம்பரிய முறையில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில், பங்கு கொள்ள விரும்புவோர் உபநயனம் நடைபெறும் இடத்தில் இரண்டு நாட்கள் தங்கி இருந்து அனைத்து நிகழ்வுகளிலும் பங்கு பெற வேண்டியது அவசியமாகும். குருவிடம் இருந்து யக்ஞோபவீதம் (பூணூல் அணியும் நிகழ்வு), காயத்ரி மந்த்ர உபதேசம் பெறுதல் மற்றும் சந்தியாவந்தனம் செய்யும் முறையை கற்றல் போன்றவை இதில் அடங்கும்.