ஶ்ரீவித்யையை இலவசமாக கற்பிப்பதயே குறிக்கோளாக கொண்டுள்ளமையால், குறைந்த அளவிலான நிதியைக்கொண்டே சமூக சேவைகள் செய்ய இயலுகிறது . இதுவரை மழை வெள்ளப் பெருக்கத்தால் பாதிப்படைந்தோர்க்கு நிவாரணம் வழங்குதல், ஆதரவற்றோர் இல்லங்களில் வாழ்வோருக்கு உதவிடுதல் மற்றும் இயற்கை பேரழிவில் பாதிப்படைந்த மாணவர்களுக்கு கல்வி தொடர்வதற்கான உதவித்தொகை வழங்குதல் போன்ற சேவைகளில் ஶ்ரீ வித்யா தந்த்ர பீடம் ஈடுபட்டுள்ளது.
இலவச ஶ்ரீவித்யா வகுப்புகளை விடுத்து, தந்த்ரம், ஜோதிஷம் மற்றும் வாஸ்து ஆலோசனை வழங்குவதால் கிடைக்கப்பெறும் நிதியைக் கொண்டு மேலும் பல சமூக சேவைகள் செய்ய இயலும் என எதிர்பார்க்கப்படுகிறது